செல்போனை பார்த்து அதிர்ந்து போன மத்திய அமைச்சர்! விசாரணையில் டெல்லி போலீசார்!
Central Minister Delhi police
மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சராக உள்ள சஞ்சய் சேத்தின் கைபேசி எண்ணுக்கு சமீபத்தில் மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது.
அந்த மிரட்டல் செய்தியில், ₹50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கேட்பதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சஞ்சய் சேத் தில்லி மற்றும் ஜார்கண்ட் காவல்துறையிடம் நேரு மத்திய இணையமைச்சர் புகார் அளித்தார்.
பின்னர், டிஜிபி உட்பட டெல்லி காவல்துறையின் உயரதிகாரிகள் சஞ்சய் சேத்தை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதை அடுத்து, மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ராஞ்சி எம்எல்ஏ சிபி சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வித மிரட்டல்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central Minister Delhi police