ஆந்திரா: 4ஆவது முறை முதலமைச்சரானார் சந்திரபாபு நாயுடு.. துணை முதல்வராக பவன் கல்யாண்! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையில் ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி முந்தைய ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டது.  இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவின் புறநகர்ப் பகுதியான கண்ணாவரத்தில் இன்று காலை முதல்  பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து பவன் கல்யாண் மற்றும் 24 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் ஆந்திராவின் துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை தொடர்ந்து பதவி ஏற்ற பின் பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவை கட்டித் தழுவி வாழ்த்துக்களை கூறினார். மேலும் பவன் கல்யாண் தனது அண்ணன் நடிகர் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இவ்விழாவில் திரைத் துறையில் இருந்து நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu Taking Oath As Andhra CM For The 2nd Time Pawan Kalyan As Deputy CM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->