மத்தியில் "மாநில கட்சிகளின் ஆட்சி" தான்.. பாஜக, காங்கிரசுக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்கு பதிவு 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில் இந்த முறை நாட்டில் புதியதாக ஒன்று நடக்கப் போகிறது என ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து பேசிய அவர் "தற்போது அனைத்து மாநில கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக செயல்படுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி ஆதரவுடன் மாநில கட்சிகள் இம்முறை மத்தியில் ஆட்சி அமைக்கும்" என கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பொது தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என சில கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrasekhar Rao said regional parties form CentralGovt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->