கஸ்டடி உறுதி..!! நாளை முதல் ED விசாரணை.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Chennai Court upheld ED custody of Minister Senthil Balaji
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் போப்பன்னா மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லும் எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
அப்போது அமலாக்கத்துறை தரப்பு செந்தில் பாலாஜி உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு செந்தில் பாலாஜி தரப்பினர் அவருடைய உடல் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு செந்தில் பாலாஜி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அமலாக்கத்துறை தரப்பு பதிலடி கொடுத்ததை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உடனடியாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜரானார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்ததோடு வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை நாளை முதல் காவலில் எடுத்து விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Chennai Court upheld ED custody of Minister Senthil Balaji