சென்னையில் 10 பெண்களை ஏமாற்றிய நாடக காதலன் திமுகவை சேர்ந்தவனா! பாஜக வெளியிட்ட ஆதாரம்!
Chennai Drama Lover Thamilarasan Case DMK vs BJP
சென்னையில் 10 பெண்களை ஏமாற்றிய நாடக காதலன் லியாஸ் தமிழரசன், பாஜக நிர்வாகி என்று செய்தி வெளியான நிலையில், இதற்க்கு பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் எஸ்ஜி சூர்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தேதியில் லியாஸ் தமிழரசன் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட செயலாளர் என்பதற்கு என்ன ஆதாரத்தை ஊடகங்கள் வைத்துள்ளன?
இவரது தந்தை பரம்பரை தி.மு.க-காரர். லியாஸ் தமிழரசன் தி.மு.க மற்றும் அம்பேத்கர் சேனா அமைப்புகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.
பா.ஜ.க-வில் அனைத்து பொறுப்புகளும் கடந்த செப்டம்பர் முதலே காலாவதியாகி விட்டது. 2024 செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த பருவத்திற்கான புதிய உறுப்பினர் புதுப்பித்தலை கூட லியாஸ் தமிழரசன் செய்யவில்லை என கண்டுபிடித்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்றைய தேதிக்கு லியாஸ் தமிழரசன் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.
பின் எப்படி இவனை பா.ஜ.க மாவட்ட செயலாளர் என அனைத்து தமிழக ஊடகமும் சொல்லி வைத்தது போல் அழைக்கிறது? ஊடகங்கள் உண்மையை சரி பார்த்து செய்திகளை வெளியிட வேண்டாமா?
இணைக்கப்பட்டுள்ள படங்கள்:
1. லியாஸ் தமிழரசன் அவனது தி.மு.க வாகனத்தில்.
2. லியாஸ் தமிழரசன் தி.மு.க-வில் அடித்த போஸ்டர்.
3 & 4. லியாஸ் தமிழரசன் தந்தை R.ஏழுமலை தி.மு.க பொறுப்பில் இருப்பதற்கான கல்வெட்டு ஆதாரம்.
பின்குறிப்பு: லியாஸ் தமிழரசன் தந்தையும் தி.மு.க நிர்வாகியுமான R.ஏழுமலை இன்று காலை முதல் absconding ஆம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chennai Drama Lover Thamilarasan Case DMK vs BJP