பல ஆண்டுகளாக சாராயம் விற்பனை செய்கிறார்களா? தடுக்காமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? உயர்நீதிமன்றம் கேள்வி! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 67 பேர்  உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

தங்கள் மீதான இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சம்பத்தப்பட்ட 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. 

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 18 பேரும் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். 

இதனை கேட்டு அதிர்ந்த நீதிபதிகள், பல ஆண்டுகளாக அவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்கள் என்றால், அவர்களை கட்டுப்படுத்தாமல் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மது விலக்கு பிரிவு என்ன தான் செய்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court Kallakurichi Hooch Case DMK Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->