சென்னை : மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய முஸ்தபா | மீட்கப்பட்ட அழகிகள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை : சாலிகிராம அருணாச்சலம் சாலை பகுதியில் விபச்சாரம் நடப்பதாக, விருகம்பாக்கம் காவல்துறை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

இதனை அடுத்து விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தாம்சன் சேவியர் சார்ஜ் தலைமையிலான போலீசார், அந்த பகுதியிலிருந்த மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது உறுதியானது. மேலும் போலீசாரின் விசாரணையில், திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்பவர் இளம்பெண்களை வைத்து ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில், விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து முஸ்தபாவை கைது செய்த போலீசார், வட மாநில இளம்பெண் உள்ளிட்ட மூன்று இளம் பெண்களை மீட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுவது, 'மிக குறைந்த கட்டணத்தில் ஆயுர்வேத மசாஜ்' என்று ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை வரவைத்து, பின்னர் அவர்களிடம் அழகிகளை காட்டி நூதன முறையில் விபச்சாரம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், தற்போது சாலிகிராம் பகுதி மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Massage center prostitution 2023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->