"பழைய ஓய்வூதிய திட்டம்" என்னாச்சு? - அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த காங்கிரஸ்.!!
Chidambaram explain old pension scheme not present in congress manifesto
இதில் ஒரு மக்களவை பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று அத்தாட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி சோனியா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முன்னால் நிதியமைச்சர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் "தற்போது அமலில் இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மத்திய அரசு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த குழுவின் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடவில்லை.
அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். எங்கள் மனதில் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவின் வழியிலேயே காங்கிரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் முடிவெடுக்கும் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
English Summary
Chidambaram explain old pension scheme not present in congress manifesto