ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை! அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் அசோக் கெலாட்!
CM Ashok Gehlot rajasthan Gas Cylinde
ராஜஸ்தானில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்க உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., முன்னிலையில் இதனை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று அறிவித்துள்ளார்.
மேலும், வரும் மாதம் பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறோம். ஒன்று மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகளை வழங்குகிறார்.
ஆனால் அந்த சமையல் எரிவாயு உருளை காலியாக இருக்கிறது. காரணம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.400 முதல் ரூ.1,040 வரை உள்ளது.
எனவே, வரும் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்" என்று, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதல்வர் இதனை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
CM Ashok Gehlot rajasthan Gas Cylinde