பயங்கரவாதிகள் தாக்குதல்: CM ஸ்டாலின் கடும் கண்டனம்!
CM MK Stalin Condemn terrorist attack in Pahalgam Jammu and Kashmir
ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலத்திற்கு இன்று (ஏப். 22) வழக்கம்போல் பயணிகள் சென்றிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் திடீரென பயணிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த பயங்கர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அராஜகத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த தாக்குதலைக் கடும் வார்த்தைகளில் கண்டித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் அப்பாவி உயிர்களை கொடூரமாக நிகழ்த்திய கொலைவெறி சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. உயிரிழந்தோருக்குத் தனிவருத்தம் தெரிவிக்கின்றேன். தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக வந்த தகவல் கவலைக்கிடமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, தமிழகத்தின் தில்லி ஆணையருக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்."
English Summary
CM MK Stalin Condemn terrorist attack in Pahalgam Jammu and Kashmir