கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும், கூட்டத்தை கூட்டுங்க., பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.! - Seithipunal
Seithipunal


மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை கூட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை களைய கவுன்சில் கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 3 முறை நடத்தப்பட வேண்டிய கவுன்சில் கூட்டமானது, கடந்த 6 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே கூடியுள்ளது. அதுவும் கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் தான் .

கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சில் கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும்" என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin letter to pm modi for meeting state central govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->