#Breaking || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில அரசுப் பாடலாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வழியாக இசைப்படுவதாகவும் இதனால், விழாவில் பங்கேற்பு தமிழ் தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை.

மேலும் எந்தவித தேசப்பற்று தமிழ் உணர்வு இல்லாமல் இயந்திர கதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது அந்த நோக்கம் சிதைந்து போகிறது.  

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில அரசுப் பாடலாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கல்வி நிறுவனம், அரசு அலுவலகத்தில் நிகழ்ச்சி துவங்கும் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் போடப்படவேண்டும். தமிழ்தாய் வாழ்த்தை இசை வட்டு கொண்டு இசைக்காமல், வாய்ப்பாடாக பாடவேண்டும்.

தனியார் நடத்தும் கலை, இலக்கிய பொது நிகழ்வுகளில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில், மூன்றன் நடையில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN SAY ABOUT THAMIZHTHAI VAZHTHU SONG


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->