இது மட்டும் திமுக ஆட்சியில் இல்லவே இல்லை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
cm stalin say about tn law and order issue in tn assembly
திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார். அதில்,
"உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை. ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம்; காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும். காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்.
விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது; விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக்கூடாது.
விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை.
அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வன்முறை பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
English Summary
cm stalin say about tn law and order issue in tn assembly