பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் கரூர் பயணம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நேற்று முதலமைச்சர் ஆக பதிவேற்ற பிறகு மு க ஸ்டாலின் முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர்  மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு செல்கிறார். அதன் பிறகு விழா மேடையில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார். 

இதையடுத்து கரூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளில் தொடங்கி வைக்கும் உள்ளார். அதன்பிறகு,  நாமக்கல் மாவட்டத்திலும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்குகிறார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் வழியில் 23 இடங்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். முதலமைச்சர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin visit to karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->