மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு இடையில் மராத்தான் போட்டி: சீனாவின் முதல் முயற்சி..!
Marathon competition between humans and robots
மனிதர்களும், ரோபோ வீரர்களும் பங்கேற்கும் உலகின் முதல் மராத்தானை நடத்த சீனா முடிவெடுத்துள்ளது. குறித்த போட்டி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற உள்ளது.
பீஜிங்கின் டாக்சிங் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டுள்ள அரை-மராத்தான் போட்டியில் (21 கிமீ) 12,000 விளையாட்டு வீரர்களுடன் குறைந்தது டஜன் கணக்கான ரோபோக்கள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து எஸ்.சி.எம்.பி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
பீஜிங் பொருளாதார- தொழில்நுட்ப மேம்பாட்டுப் பகுதி அல்லது இ-டவுனின் நிர்வாக அமைப்பின்படி, மராத்தானுக்கான ரோபோக்கள் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. பந்தயத்திற்கான ஒரே நிபந்தனை, ரோபோக்கள் மனிதர்களைப் போல இருக்க வேண்டும். இரு கால் நடைபயிற்சி அல்லது ஓடுதல் போன்ற இயக்கச் செயல்களைச் செய்யக்கூடிய இயந்திர அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும், சக்கரங்களில் இருக்கக்கூடாது.
ரோபோக்கள் 0.5 மீட்டர் முதல் 2 மீட்டர் (1.6 அடி முதல் 6.5 அடி) உயரம் வரை இருக்க வேண்டும், மேலும் இடுப்பு மூட்டிலிருந்து உள்ளங்கால் வரை அவற்றின் அதிகபட்ச நீட்டிப்பு தூரம் குறைந்தது 0.45 மீட்டர் இருக்க வேண்டும். முதல் மூன்று ஓட்டப்பந்தய வீரர்கள் பரிசுகளைப் பெறுவார்கள்.
முழுமையாக தன்னாட்சி பெற்ற மனித உருவங்கள் பந்தயத்தில் பங்கேற்க தகுதியுடையவை.
ரோபோ ஆபரேட்டர்கள் பேட்டரிகளை நடுவில் மாற்றலாம்.சீனாவின் எம்போடிட் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ரோபாட்டிக்ஸ் இன்னோவேஷன் சென்டரால் உருவாக்கப்பட்ட டியாங்காங் ஒரு மனித உருவ ரோபோ இப் போட்டியில் களம் இறங்குகிறது.
இந்த ரோபோ மணிக்கு சராசரியாக 10 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறது.பீஜிங்கில் நடந்த யிசுவாங் ஹாப் மராத்தானில் இந்த ரோபோ பங்கே ற்றுள்ளது.
மனித போட்டியாளர்களுடன் கடைசி வரை ஓடிய இந்த ரோபோ, கடந்த ஆண்டு டியாங்காங் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. சர்வதேச ரோபாட்டிக்ஸ் கூட்டமைப்பின் புள்ளி விபரப்படி, சீன வாடிக்கையாளர்கள் 2023ம் ஆண்டில் 276,288 ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.
இது உலகின் மொத்த ரோபோக்களில் 51 சதவீதம் ஆகும். பீஜிங் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விளையாட்டு நிகழ்வையும் திட்டமிட்டுள்ளது, இதில் தடகளம், கால்பந்து மற்றும் பிற திறன் சார்ந்த சவால்களில் போட்டியிடும் மனித ரோபோக்கள் இடம்பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Marathon competition between humans and robots