காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சென்ற காரில் கட்டுக்கட்டாக கோடி கணக்கில் இருந்த பணம்.! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்கத்தில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பயணம் செய்த காரில் இருந்து, கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு இரண்டு கோடி என்று போலீசார் முதல் கட்ட தகவலை தெரிவித்துள்ளனர். 

போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அந்த காரில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ், நமன் விக்சல் ஆகிய மூன்று பேரும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனை எடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடம் இருந்து ஆவணங்கள் இல்லாமல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

confiscation of cash from Jharkhand Congress MLAs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->