இறுதிக்கட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்... மாலைக்குள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள வேட்பாளர்களின் பெயர்களை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress candidates list issued


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->