அடித்தது ஜாக்பாட்.. 12 ஹெலிகாப்டர், ரிசார்ட் ரெடி..!! குஷியில் காங்கிரஸ் வேட்பாளர்கள்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் என்னும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 120 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தாவலை தடுக்கும் முயற்சியாக முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை பெங்களூருக்கு வரும்படி காங்கிரஸ் கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

கடலோர கர்நாடகா உள்ளிட்ட பெங்களூரு நகரத்திலிருந்து தொலைவில் உள்ள தொகுதிகளில் முன்னிலை பதிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை 12 ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக அழைத்து வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கவைக்க பெங்களூரு தேவனஹள்ளியில் ரிசார்ட்டும் தயாராக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress prepare 12 helicopter to bring the Congress candidates


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->