பிரதமர் மோடியின் உரை மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது -காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை பற்றி  காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா பத்திரிக்கையாளர்களுக்குப்  பேட்டி அளித்தார். 

அவர் அளித்த பேட்டியில்:- 

பிரதமர் மோடியின் உரை முதிர்ச்சியுடன் இருக்கும் என்றும்,  அவர் தனது 8 ஆண்டுகால ஆட்சியின் வாக்குறுதிகள் பற்றி பேசுவார் என்றும் மக்கள் எதிர்பார்த்தனர். அதாவது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, அனைவருக்கும் வீடு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது உள்ளிட்ட வாக்குறுதிகளுக்கான பதிலை எதிர்பார்த்திருந்தனர் . 

ஆனால்,  பிரதமர் மோடி அந்த வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாமல், அவர் நாட்டை கைவிட்டு விட்டார். அவரது உரை மக்களுக்கு   ஏமாற்றத்தை  அளிக்கிறது. பிரதமரின் பேச்சில் எந்தவிதமான உற்சாகமும் இல்லை. அவர் சோர்ந்து  போய்விட்டார். அவரது வார்த்தைகளே அவரை துரத்திக்கொண்டுள்ளன. 

அதனால் பாதிக்கப்பட்டு உறக்கம்  வராமல் தவிக்கிறார். பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் பாரத ஜனதாவின் உள்விவகாரத்தை பேசி இருப்பதாக கருதுகிறோம். ஏனென்றால், பாரத.ஜனதா கட்சியின் தலைவர்கள் பலருடைய மகன்களுக்கு  போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் முக்கிய பதவி வகித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress say about pm modi independents day speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->