மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் - பிரதமர் மோடி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக வெட்டப்பளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மதத்தின் அடிப்படையில் இடஒதிக்கீட்டை வழங்கமாட்டோம் என்று அறிவிக்குமாறு காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு சவால் விடுகிறேன்.

400 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்று நன் கூறுவது, அரசியல் சாசனத்தை மாற்றுவதற்குதான் என்று காங்கிரஸ் வதந்தியை பரப்புகிறது. மதத்தின் பெயரால் முஸ்லீம்களுக்கு இடஒதிக்கீடு வழங்க வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress should announce reservation on religious grounds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->