அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்த அஸ்திரம்! முடிச்சுவிட்ட அவைத் தலைவர்!
Congress Sonia BJP amit shah Lok Sabha
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று நிராகரித்தார்.
தன்கர், நோட்டீஸை கவனமாக பரிசீலித்ததாகவும், அதில் எந்த விதிமீறலும் இல்லை என்பதையும் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டு என்ன?
ஜெய்ராம் ரமேஷ் அளித்த நோட்டீஸில், கடந்த செவ்வாய்க்கிழமை, பேரிடர் மேலாண்மை மசோதா தொடர்பான விவாதத்துக்கு பதிலளிக்கையில், அமித் ஷா சில சர்ச்சையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டது.
அமித்ஷாவின் அந்த உரை:
"யுபிஏ ஆட்சியில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி ஒரு குடும்பத்தினரால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில், பிரதமரின் அவசரகால நிவாரண நிதி எந்த ஒரு குடும்பத்தினராலும் கட்டுப்படுத்தப்படவில்லை. யுபிஏ ஆட்சியில், அரசு நிதிகள் மீது காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் இருந்தது" என தெரிவித்திருந்தார்.
அமித் ஷா, யார் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், அவரது பேச்சு சோனியா காந்தியை குறிவைத்து இருந்ததாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.
மேலும், இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாக இருப்பதால், உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார்.
English Summary
Congress Sonia BJP amit shah Lok Sabha