இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சி செய்கிறது பாஜக..ராகுல்காந்தி பரபரப்பு குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்துள்ளார் ராகுல் காந்தி.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நீலக்கிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திமுக துணை பொதுசெயலாளர் அ. ராசாவை ஆதரித்து பிரச்சாரம் ஈடுப்பட்டு வருகிறார் ராகுல் காந்தி. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட ராகுல்காந்தி பேசுகையில், பாஜக தேர்தல் அறிக்கையில் மட்டுமல்ல எப்போதும் விவசாயிகளை கண்டுகொள்ளாது. இதுதான் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு. பாஜகவும் மோடியும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சி செய்துவருகின்றனர். பாஜகவினர் தமிழர்களின் தமிழ் மொழி, கலாச்சாரம், அழிப்பதற்கும் தயங்கமாட்டார்கள் என்று பேசினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி பேசுவதை தமிழ் மொழிபெயர்க்கபட்டு பேசியப்போதும், மக்கள் ஒன்றும் புரியாமல் நின்ற சம்பவம் திமுகவினரிடையே பேரும் அருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Constitution of India Act change bjp raghul gandhi speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->