ஜெ.ஜெ சொத்து ஏலத்தில் டுவிஸ்ட்.. சசிகலா வங்கி கணக்கிலும்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!
Court announced order will issue on Aug31 in Jayalalitha properties auction
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் தட்சிணாமூர்த்தி பெங்களூரு சிறப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விடுவது குறித்து சிறப்பு வழக்கறிஞரை நியமித்ததோடு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
மேலும் கடந்த முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது ஏலம் விடுவதற்கான சொத்து பட்டியலின் முழு விவரங்களை அளிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையால் சிறப்பு நீதிமன்றத்தில் ஏலம் விட வேண்டிய சொத்து பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி தங்கம், வெள்ளி, 6 நிறுவனத்திற்கு சொந்தமான 65க்கும் மேற்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த சொத்துக்கள் எப்படி ஏலம் விட வேண்டும் என்பது குறித்தும், என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டறிந்தார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, இளவரசி உள்ளிட்ட மற்ற நபர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்பு நிதி, அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த சொத்துக்களை எவ்வாறு ஏலம் விடுவது என்பது குறித்தும் உத்தரவிடப்படும் என சிறப்பும் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த சொத்துக்களை ஏலம் விடுவதன் மூலம் அந்த அபராத தொகையை தமிழக அரசு பெற்றுக் கொள்ளும் எனவும், வழக்கு செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கடந்த முறை விசாரணையின் போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டி நீதிபதி ஜெயலலிதா வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காலனி, சேலை, கை கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்கள் பட்டியலில் இல்லை. எனவே இவற்றை ஏழை விட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனக் கூறி வழக்கில் விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
English Summary
Court announced order will issue on Aug31 in Jayalalitha properties auction