மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் புகட்டிய தக்க பாடம் - திமுக கூட்டணி கட்சி தலைவர் ஆவேசம்! - Seithipunal
Seithipunal



நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக, திமுகவின் கூட்டணி கட்சியான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்..

இதுகுறித்த அவரின் அறிக்கையில், பாஜகவின் அதிகார பலம், தில்லு முல்லுகள், பண பலம், வெறுப்பு பேச்சுகள் இவைகளை முறியடித்து பாஜகவின் தனித்த ஆட்சிக்கு வாக்காளர்கள் முடிவு கட்டியுள்ளனர். பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பாஜக படு தோல்வியடைந்துள்ளது. 

திட்டமிட்டு திணிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வாக்காளர்கள் தவிடுபொடியாக்கியுள்ளார்கள். மோடியின் (சார் சோ பார்) 400+ என்ற முழக்கம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் மதவெறி சக்திகளின் பண பலம், அதிகார பலம் தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி இந்தியா அணி வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. 

நரேந்திர மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழகத்துல் பாஜக காலூன்ற முடியாது என்பதை தமிழக வாக்காளப் பெருமக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள். இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. ஆனால், அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, பாஜகவிற்கு செல்வாக்குள்ள உத்திரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்டு பல மாநிலங்களில் பெரும் சரிவை அக்கட்சி சந்தித்துள்ளது. கடந்த 10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Balakrishnan say About Election 2024 Result


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->