பாஜகவின் வன்முறை அரசியலுக்கு சி.பி.எம் கனகராஜ் கண்டனம்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஹைந்துவ சங்கம் சார்பில் நடைபெற இருந்த சமய மாநாட்டிற்கு காவல் துறையினர் தடை விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு சிபிஎம் மாநில செயலாளர் கனகராஜ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழாவில் ஹைந்துவ சங்கம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ், பாஜக நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் சமய நிகழ்ச்சிகளை அரசு தடை செய்து விட்டதாக சம்பாரிவார்கள் வழக்கம்போல் மோசடி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

முதலமைச்சர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது வன்முறையால் அரசியல் லாபத்தை அறுவடை செய்பவர்களின் கொந்தளிப்பு. மாநில அரசும் காவல் துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPM Kanagaraj Condemns BJP violent politics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->