திமுக-மதிமுக கூட்டணியில் விரிசல்?....துரை வைகோ கூறியது என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியை அளிக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளதாகவும்,  கொரோனா காலகட்டத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது, காலை உணவு திட்டம்,  என அனைத்து திட்டமும் தமிழக அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு இந்தியாவுக்கு முன் உதாரணமாக இருந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும்,  மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்று கூறியதாக கூறிய அவர், இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக்கூடாது என்று கூறினார்.

திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணி மாறாது என்று தெரிவித்த அவர், கூட்டணி மாற்றம் என்ற நிலையை திமுக தலைமை ஒருபோதும் எடுக்காது என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் மதவாதக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்றக்கூடாது என்பதால் கூட்டணி கட்சிகள் ஒன்றுபடுவதாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crack in DMK MDMK alliance What did Durai Vaiko say


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->