எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு!....மோடியை கண்டால் பாகிஸ்தான் பயந்து ஓடுகிறது - அமைச்சர் அமித்ஷா! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி,
கடந்த  18ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொடர்ந்து வரும்  25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி  மூன்று கட்ட தேர்தல் என்று மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  

இந்த தேர்தலில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டியிடும் நிலையில், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சிகள் தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது. 2 மற்றும் 3- ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால்,  அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில்,காஷ்மீரில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பூஞ்ச் மாவட்டத்தில்  பா.ஜ.க. வேட்பாளர் முர்தாஸா கானை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, 1990-ம் ஆண்டு எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில், தற்போது இது போன்ற விஷயங்கள் நடைபெறுவது இல்லை.

மேலும் இதற்கு காரணம், முந்தைய ஆட்சியாளர்கள்  பாகிஸ்தானைக் கண்டு பயந்தார்கள் என்று கூறிய அவர், தற்போது மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cross Border Firing Pakistan Runs Afraid to See Modi Minister Amit Shah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->