அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் தேசியக்கொடி.! பாஜக மீது காவல்நிலையத்தில் புகார்.!
Cuddalore Thirupapuliyur Temple issue
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு வீடுகளிலும், நிறுவனங்களிலும் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நாளைக்கு கொடியேற்றி சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் பாஜகவினர் தேசியக் கொடியை ஏற்றினர்.
விதிமுறைகளை பின்பற்றி தேசியக் கொடியை இறக்க வேண்டும் என்பதால் அறநிலையத்துறையினர் தேசிய கொடியை இறக்கவில்லை.
இதனைத் அடுத்து, கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் கோயிலில் தேசியக் கொடியை ஏற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.
English Summary
Cuddalore Thirupapuliyur Temple issue