ஜெயலலிதா செய்த அதே தவறை செய்த திமுக விடியா அரசு! கடலூரை திட்டமிட்டு மூழ்கடிக்க சதியா? வைரலாகும் பதிவு! - Seithipunal
Seithipunal


கடலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பாரின் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சாத்தனூர் அணையை இரவோடு இரவாக திறந்து பெண்ணையில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய விடியா அரசு….

2015இல் ஜெயலலிதா அரசு செய்த அதே தவறை திமுக விடியா அரசும் செய்துள்ளது. சாத்தனூர் அணையின் நீர் வரத்து, அதன் கொள்ளளவு இதை எல்லாம் கணக்கில் கொண்டு கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நீரை திறந்து விடாமல் திடீரென ஒரு இரவில் 1.25 இலட்சம் கண அடி நீரை வெளியேற்றியதால் தென்பெண்ணை ஆற்றின் வழி எங்கும் வெள்ளம்…

சாத்தனூர் அணை மட்டுமல்ல, பல ஏரிகள் உடைப்பெடுத்துள்ளன, இன்னும் பல ஏரிகள் உடையும் நிலையில் உள்ளன.

இன்று விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்யவில்லை, அல்லது குறைவு. ஆனால் பெண்ணையாற்று தண்ணீர் ஊரினுள் புகுந்ததே தற்போதைய பேரழிவிற்கு காரணம்.

அய்யய்யோ இவ்ளோ மழை பெய்யும் என எதிர்பார்க்கலைங்க என்று சாதாரண பொதுமக்களை போல அரசு சொல்ல முடியாது. அதற்கு தான் அரசு எந்திரம் என்ற மாபெரும் மான்ஸ்டர் உள்ளது.

சென்னை மேலே கண்ணை வைத்து சென்ற ஆண்டு தென் மாவட்டங்களை அழிவுக்குள்ளாக்கி கோட்டை விட்டதை போல இந்த ஆண்டு வடமாவட்டங்களை கோட்டை விட்டுள்ளது இந்த விடியாத திராவிட மாடல் அரசு" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் ஒன்றும் சித்தி வெளியிட்டுள்ளது. அதனை விரிவாக படிக்க கீழ் காணும் பதிவை பார்க்கவும்:


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Viluppuram Cyclone Fengal flood reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->