தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் பதவிக் காலம் முடிகிறது.. புதிய ஆளுநர் யார்..!? - Seithipunal
Seithipunal



தற்போதைய தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர். என். ரவி. இவரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு மத்திய அரசு ஆர். என். ரவியை தமிழக ஆளுநராக நியமித்தது. முன்னதாக இவர் மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் ஆளுநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் நீட் மசோதாவை கிடப்பில் போட்டது, தமிழக அரசு விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பது, தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவது, பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களில் ஆர். எஸ். எஸ். சித்தாந்தங்களை பரப்புவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரராக இருப்பவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.

மேலும் சட்டமன்றத்தில் தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது, சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் தான் பாடப் பட வேண்டும் என்று கூறியது, தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்றியது என்று தன்னிச்சையாக இவர் செயல்பட்டு பல்வேறு கட்சிகளின் கண்டனத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், ரவியையே தமிழக ஆளுநராக நீடிக்க விடலாமா அல்லது பாஜக மூத்த தலைவர்கள் யாரையாவது தமிழக ஆளுநராக நியமிக்கலாமா என்று யோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Current TN Governor R N Ravis Tenure Will Be End Soon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->