சைபர் குற்றத்துக்கு எல்லை இல்லை! அனைவரும் ஒன்று சேர வேண்டும்! - மத்திய மந்திரி அமித்ஷா! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் அமைப்பு தின விழா  கொண்டாடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் முதல் அமைப்பு தின விழாவில் பங்கேற்றார். சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முக்கிய முன் முயற்சிகளை அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் சைபர் குற்றங்கள் குறைப்பு மையத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:- தற்போது உள்ள சூழ்நிலையில் சைபர் பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தொழில் நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பல அச்சுறுத்தல்களைக் தொழில்நுட்பத்தின் மூலம் காண படுகிறது. இதனால், சைபர் குற்றத்துக்கு எல்லையே இல்லை. எனவே நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

தேசிய பாதுகாப்பின் முக்கிய அங்கமாக சைபர் பாதுகாப்பு ஆகிவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களுக்கு சைபர் குற்றங்களை எதிர்கொள்ள பயிற்சி அளித்து தயார்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyber ​​crime knows no bounds Everyone should come together Union Minister Amit Shah


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->