கடலூர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மழை வெள்ளம் மற்றும் சாத்தனூர் அணையிலிருந்து இரவு 2 மணிக்கு திறந்து விடப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் (1,70,000) கனஅடி தண்ணீரால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், கண்டக்காடு கிராம பொதுமக்களுக்கு, பாமக சார்பில் நிவாரணம் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, தேவையான மருத்துவ உதவிகளை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "குறைந்தது 5 மணி நேரத்திற்கு முன்பாகவே சாத்தனூர் அணையை திறக்கப் போகிறோம் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். 

வீட்டு உபயோக பொருட்கள், பைக் உள்ளிட்ட பெருத்த சோதாரமாகியுள்ளது. இதற்க்கு தமிழக அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.

வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2000 ரூபாய் போதாது. பொருட்களுக்கு யார் நிவாரணம் கொடுப்பது? 

சென்னையில், தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது 6000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசு வெறும் 2000 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன்? இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் என்ன பாவப்பட்ட மக்களா? என்று அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone Fengal cuddalore district PMK Anbumani Ramadoss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->