டெல்லியில் உள்ள இந்து கோயில்கள் இடிக்க உத்தரவா? ஆளுநர் vs முதல்வர்! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள பல இந்து மற்றும் பௌத்த கோயில்கள், மதக் கட்டமைப்புகளை இடிக்க, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் வழிகாட்டுதலின்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டெல்லி முதலமைச்சர் அதிஷி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து துணை நிலை ஆளுநருக்கு முதலமைச்சர் அதிஷி எழுதிய கடிதம் ஒன்றில், "நவம்பர் 22-ஆம் தேதி நடந்த மதக் குழு கூட்டத்தில், உங்கள் (துணை நிலை ஆளுநர்) வழிகாட்டுதலின் கீழ் டெல்லி முழுவதும் பல மதக் கட்டமைப்புகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.  

மேலும், மேற்கு படேல் நகர், தில்ஷாத் கார்டன், சீமா புரி, கோகல் பூரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதக் கட்டமைப்புகள், அதில் பல கோயில்கள் மற்றும் புத்த வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்பட உள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அதிஷி, "மத உணர்வுகளை புண்படுத்தாத வகையில் செயல்படுவோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை துணை நிலை ஆளுநர் சக்சேனா மறுத்து உள்ளார்.

மேலும், "அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரசு பொய்கள் மூலம் மலிவான அரசியல் செய்யிறார்" என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi Atishi vs governor VK Saxena AAP BJP temple 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->