நீதிபதி யஷ்வந்த் மீது எஃப்ஐஆர் கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
Delhi HC Judge Varma vase
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
“உள்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இப்போது எடுக்கும் முடிவு அவசரமானதாக இருக்கக்கூடும்” என நீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி மூன்று நீதிபதிகள் கொண்ட உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நேரத்தில் எஃப்ஐஆர் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், நீதிபதி எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடலாம், அல்லது நாடாளுமன்றத்துக்கே பரிந்துரைக்கலாம். உள்ள்நோக்க விசாரணை அறிக்கை வெளியாகும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்த மனு மிக அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது” எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Delhi HC Judge Varma vase