நாடு சுதந்திரம் அடைய தனது இன்னுயிர் ஈந்த வீரர்களின் தியாகத்தை போற்றிடுவோம் - டாக்டர் தி.தேவநாதன் யாதவ்.!
devanathan wish IndependenceDay
"பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு" என்ற மகாகவியின் வரிகளை சுட்டிக்காட்டி பார் போற்றும் இந்த பாரதத்தில் பிறந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் சுதந்திரத்திற்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பிணைப்பு உள்ளது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த வீர மண் தமிழகம். கப்பம் கட்டுவதும், கற்பை இழப்பதும் ஒன்றே என வீர முழக்கமிட்டு ஆங்கிலேய அரசை எதிர்த்து நின்று, பீரங்கி வாயிலில் கட்டப்பட்ட போதிலும், வெள்ளையனிடம் அடிபணியாமல் தன்னுயிரை தியாகம் செய்து இந்தியரின் மானத்தையும் வீரத்தையும் பறைசாற்றியவர் மாவீரன். அதே போல் திருச்சி வந்த ஆங்கிலேய அதிகாரியை வரவேற்க மறுத்து ஆங்கிலேய படைகளுடன் போரிட்டு வென்று ஆங்கிலேயருக்கெதிரான முதல் போரினை நடத்தி வெற்றி பெற்றவர் பூலித்தேவன்.
இதேபோன்று, மருது சகோதார்கள், வீரமங்கை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் என எண்ணற்ற தலைவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரர்களுக்கு பின்னும் தியாக வரலாறு உள்ளது. இவர்களை நாட்டுக்காக போராடத்தூண்டியது தேசப்பற்று தான். நாட்டுக்காக தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் தேசப்பற்றையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்த இந்த பொன்னானில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் எட்ட முடியாத உயரத்தை இந்தியா எட்டி இருக்கிறது என்பதில் பெரு மகிழ்ச்சி அடைவோம். கொரோனா பேரிடரால் பல உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கி அடிப்படை கட்டமைப்பை இழந்து நிற்கிறது. ஆனால் அத்தகைய நிலைக்கு இந்திய திருநாடு செல்லாமல் இருக்க பல எண்ணற்ற திட்டங்களை வகுத்து நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வந்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த இந்த பொன்னான நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
ஜெய்ஹிந்த்..!
English Summary
devanathan wish IndependenceDay