அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் - வேடசந்தூர் ஒன்றியம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது, திமுக-விற்கு ஆதரவாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களான, சந்திரா சவடமுத்து, (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் -கிழக்கு ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர், சத்தியபிரியா பாலமுருகன் - வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர், S. பார்த்திபன் -வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு உறுப்பினர், கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர், P. காளிமுத்து - வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 6-வது வார்டு உறுப்பினர், கிழக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர், A. ஜானகி - வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு உறுப்பினர்.

G. புஷ்பவள்ளி - வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு உறுப்பினர், மேற்கு ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்,  G. தேவசாகயம் - வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு உறுப்பினர், மேற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட S. சவடமுத்து - வேடசந்தூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர், K. பாலமுருகன் - வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindugal admk members dismissal for party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->