#BREAKING || முன்னாள் அதிமுக நிர்வாகியின் பேச்சுக்கு சேரன் கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி திறப்பினர் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக பேட்டியளித்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பிய உள்ளது. 

முன்னாள் அதிமுக நிர்வாகியின் இத்தகைய பேச்சுக்கு பல்வேறு தரப்பட்ட மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் சேரன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இயக்குனர் சேரன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் "வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" என நடிகர் விஷால் மற்றும் கார்த்திக்கை குறிப்பிட்டு பதிவேற்றுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director cheran condemned to former aiadmk admin raju


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->