சந்தனப்பேழையில் விடைப்பெற்றார் கேப்டன் விஜயகாந்த்.!!
DMDK chief Vijayakanth was cremated with state honors with 72bullet blasts
மறைந்த தேமுதிக தலைவர் காப்பியன் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.!!
கடந்த சிலமாதங்களாக உடல்நிலை குறைவால் பாதிப்பட்டு இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. விஜயகாந்திற்கு ஆயிரக்கணக்கான கட்சி ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துவரப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பூந்தமல்லி சாலையாக வந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கண்ணீருடன் பின் தொடர்ந்ததோட சாலையின் இருப்புறங்களில் நின்றிருந்த விஜயகாந்திற்கு கண்ணீரில் பிரியா விடை அளித்தனர்.
பின்னர் இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்டு அங்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் முன்னிலையில் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு அரசு அரியாதை செலுத்தப்பட்டு விஜயகாந்த் உடலுக்கு அவரது இருமகன்கள் இறுதிசடங்கு செய்த பின் சந்தனபேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட விஜயகாந்த் பிரியா விடைப்பெற்று மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.
English Summary
DMDK chief Vijayakanth was cremated with state honors with 72bullet blasts