தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. அதிர்ச்சியில் தேமுதிகவினர்.!! - Seithipunal
Seithipunal


தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், கழக கேப்டன் மன்ற துணை செயலாளருமான பொன்னுசாமி,  சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துகுரியது.

இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பட்டபகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 உயிரிழந்த பொன்னுசாமியின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல  இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmdk member murder in kovai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->