கனிமொழியுடன் சந்திப்பு.. புன்னகை மாறுவதற்குள் திமுக ஆக்டிவிஸ்ட் மரணம்.! வருத்தத்துடன் கனிமொழி பதிவு.!  - Seithipunal
Seithipunal


பிரபல புகைப்பட கலைஞரான ஸ்டாலின் ஜேக்கப், திமுகவின் சமூக வலைதள செயல்பாட்டாளராக இருந்து வந்தார். அத்துடன் இவர் What A  Karvad என்ற ஆன்லைன் உணவு நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் ஸ்டாலின் ஜேக்கப் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், நாடாளுமன்ற திமுக எம்பி கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அதன் பின் அவர் மறைமலைநகர் அருகே தனது வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவருடன் விஷ்ணு என்பவர் பயணித்த நிலையில் இருவருக்குமே படுகாயம் ஏற்பட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட திமுக எம்பி கனிமொழி வருத்தத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில், "நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி ஸ்டாலின் ஜேகப் அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்."என்று இரங்கல்களை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dmk activist accidentally died in chengalpat 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->