'2026 இல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும், கூட்டணி கட்சிகள் திருப்தியற்ற நிலை'; தமிழிசை சவுந்தரராஜன்..! - Seithipunal
Seithipunal


 ''2026-ல் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக பிரிந்து போகும். இந்த கூட்டணி அப்படியே இருக்காது" என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு பொங்கல் வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை இருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளே திருப்தியற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களே இந்த ஆட்சி பல தவறுகளை செய்கிறது என்று நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், ''2026-ல் தி.மு.க. கூட்டணி நிச்சயமாக பிரிந்து போகும். இந்த கூட்டணி அப்படியே இருக்காது" என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK alliance will break up in 2026


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->