நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக் காத்தவர் அடல் பிகாரி வாஜ்பாய் - முக ஸ்டாலின் புகழாரம்! - Seithipunal
Seithipunal


இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.

வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை பேணிக் காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், அடல் பிகாரி வாஜ்பாயின் பங்களிப்பை நன்றியுடன் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எதிர்க்கட்சித் தலைவராக, வெளியுறவுத் துறை அமைச்சராக, பிரதமராக ஆற்றிய பணிகள் ஏராளம். தனது தேர்ந்த அரசியல் அனுபவத்தின் மூலம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்தார்.

தனது வாழ்நாளின் பெரும்பான்மை காலத்தை, அரசியல் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை புரிவதில் அர்ப்பணித்து வாழ்ந்த, 'பாரத் ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் 100 ஆவது பிறந்த நாளில், தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம்" என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CM Stalin say about atal bihari vajpayee


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->