நான் ரெடி! நீங்க ரெடியா! பொன். ராதாகிருஷ்ணனுக்கு சவால் விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி மாவட்டத்தை அடுத்த குழித்துறையில் மக்கள் தீர்வு களம் நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது "கோவை கார் வெடிப்பு சம்பவத்தை பொருத்தவரை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பாஜகவினர் அரசியல் ஆக்க முயல்கிறார்கள். தீவிரவாத செயல்களை ஒருபோதும் திமுக ஏற்றுக் கொள்ளாது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் தான்.

தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டியது திமுகவின் கடமையாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதம் உட்பட எந்த தீவிரவாதமாக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அரசு நலத்திட்டங்களில் பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளார். இது குறித்தான பொது விவாதத்திற்கு எப்போதும் நான் தயாராக உள்ளேன். அதற்கான இடத்தையும் நேரத்தையும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்கட்டும். என்னுடன் விவாதிக்க பொன் ராதாகிருஷ்ணன் தயாரா? 

பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தவறான வழிகாட்டுதலை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மீது பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர். மாநில அரசுக்கு உதவ ஆளுநர்களை அனுப்பியுள்ளார்களா? அல்லது குழப்பத்தை ஏற்படுத்த அனுப்பி உள்ளார்களா? என சந்தேகம் எழுகிறது. ஆளுநர்களின் செயல்பாடுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு விதமாகவும் ஆளாத மாநிலங்களில் ஒரு விதமாகவும் உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியது குறித்து வருத்தப்பட வேண்டாம். ஒருவர் தன்னை வைத்து தான் மற்றவர்களை ஒப்பிடுவார். அவரும் தன்னைத்தானே குரங்கு எனக் கூறுகிறார்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk Mano Thangaraj challenged BJP Ratha Krishnan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->