வைரல் வீடியோ! சர்ச்சையில் சிக்கிய அடுத்த திமுக அமைச்சர்! சிவன் கோவிலில் 'சோலி கே பீச்சே' பாடலா? பாஜக கடும் கண்டனம்!
DMK Minister EV Velu controversy speech BJP Condemn
"கோவிலுக்கு போறோம், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தமிழில் பாடுறோம். சிவன் கோவிலிலும், வைஷ்ணவ கோவிலிலும் போய் 'சோலி கே பீச்சே பீச்சே, சோலி கே பீச்சே பீச்சே' (ரவிக்கைக்குப் பின்னால், ரவிக்கைக்குப் பின்னால்)னு பாட முடியுமா? நல்லா யோசனை பண்ணு? அப்புறம் எதுக்கு ஹிந்தி படிக்கணும்?" என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக அமைச்சர்களுக்கு இதை தவிர வேறு சிந்தனையே இருக்காதா?
பொன்முடி, சைவம், வைணவம் குறித்து பேசி 'படுத்துகிட்டு, நிந்துகிட்டு' என்று பெண்களை அவமானப்படுத்திய நிலையில், இப்போது அமைச்சர் எ.வ.வேலு சிவன் கோவிலுக்கும், வைஷ்ணவ கோவிலுக்கும் போய் ‘ரவிக்கைக்கு பின்னால், ரவிக்கைக்குப் பின்னால்' என்று பெண்களின், கோவில்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார்.
ஏன் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கி ஜெ'(பாரத அன்னை வாழ்க) போன்ற ஹிந்தி வார்த்தைகள் தெரியாதா? எப்போதும் அழுக்கான ஒரே சிந்தனை தானா?
இப்படியே திமுக அமைச்சர்கள் பேசிக்கொண்டிருந்தால் தமிழக பெண்கள் திமுகவை விரட்டி அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எ.வ.வேலுவை திமுகவின் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்குவாரா? அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் எ.வ.வேலுவை அமைச்சரவையிலிருந்து நீக்குவாரா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
DMK Minister EV Velu controversy speech BJP Condemn