வாய்ச்சவடால் விடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


வாய்ச்சவடால் விடுகின்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண நிதியை அளிக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்று, திமுக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தெரிவிக்கையில், "பெருமழை, பெரும் சீற்றத்தின் போது ஆளும்கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், குறைகளைச் சுட்டிக்காட்டும் இடத்தில் உள்ள எதிர்கட்சிகள் வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் அரசியலில், கள ஆய்வு கூட்டத்தைக்கூட நடத்த முடியாத இடத்தில் இருக்கின்றார். சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டுமே அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி, சாத்தனூர் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால்தான் அதிக பாதிப்பு என கூறியுள்ளார்.

கடந்த காலத்தை அவர் திரும்பி பார்க்கவேண்டும். 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்த காரணத்தால் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பதை மறக்க முடியாது. பல லட்சம் வீடுகளும் சேதம் அடைந்தன.

சாத்தனூர் அணையைப் பொறுத்தவரை முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்  படி, 25 ஆம் தேதியிலிருந்து தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு கொடுத்துமுதற்கட்டமாக 25ஆம் தேதி 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதே போல் 5 முறை எச்சரிக்கப்பட்டு பின்னரே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இறுதியாக 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை முன்னறிவிப்பு செய்துதான் வெளியேற்றினோம். 

அதனால்தான் எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்திருந்தால் உயிர்சேதம் இன்றி எடுத்த நடவடிக்கைக்காகத் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லி வருகிறார்.

வெள்ள நிவாரண பணிகளில் மாண்புமிகு முதலமைச்சரின் போர்க்கால அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நம் மாநிலம் மட்டும் அல்லாது அண்டை மாநிலமும் பாராட்டி வருகின்றனர்.

வாய்ச்சவடால் விடுகின்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண தொகையை ஒன்றிய அரசிடமிருந்து நிதியைக் கேட்டு பெற அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Sekarbabu Condemn to ADMK EPS Sathanur dami issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->