இரண்டாவது முறையாக கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ., அதிர்ச்சியில் திமுக வட்டாரம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 1500 இருந்த நிலையில், தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.  

கொரோனா பரவல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. 

அன்மையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகியது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசுக்கு நேற்று நோய்த்தொற்று உறுதியாகியது. இன்று காலை பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்புவிற்கு நோய்த்தொற்று உறுதியாகியது.

இந்நிலையில், வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமை படுத்துக்கொண்டு, கொரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டாவது முறையாக எம்எல்ஏ கார்த்திகேயன் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருப்பது, திமுக தொண்டர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA KARTHIKEYAN AFFECTED CORONA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->