#BREAKING | கருணாநிதியின் மகன், மருமகளின் ஜாமின் மனு மீது பிப்.6ல் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பட்டியல் என மாணவியை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் வைத்து தனி படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என வாதிட்டார்.

முன்னதாக அரசு தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர் ஜாமின் மனுவுக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் தான் மனுதாரர் தரப்பு வாதங்களை வயது பதிவு செய்து கொண்ட நீதிபதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மருமகளின் ஜாமின் மனு மீதான உத்தரவு வரும் பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA karunanidhi son daughter in law bail order on feb6


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->