சிக்கலில் திமுக MP, MLA, அமைச்சர்! திமுக அரசை கதிகலங்க வைக்கும் விவகாரம் - அதிரடி கேள்வியுடன் அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. "புகார் அளித்தால் விசாரணை கமிட்டி அமைப்பதும் அதற்கு பிறகு அந்த கமிட்டி எங்கே என்று தேடுவதையும் தான் திமுக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. இது முழுக்க முழுக்க ஊழல் மற்றும் மோசடி பேர்வழிகளை காப்பாற்றும் செயல். 

அண்ணா பல்கலைக்கழக தனியார் பொறியியல் கல்லூரிகள் போலியாக பேராசிரியர்களை கணக்கு காட்டி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வாங்கி வந்ததை அறப்போர் இயக்கம் வெளிப்படுத்திய நாள் முதல் விசாரணை விசாரணை என்று கதை சொல்லும் தமிழக அரசு இது வரை என்ன, யாரிடம் விசாரணை நடந்தது, விசாரணையில் கண்டறிந்தது என்ன என்பதை பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. 

பேராசிரியர்களை விசாரணைக்கு அழைத்தோம் ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டும் எந்த வித கூச்சமும் இல்லாமல் பல மாதங்களாக சொல்லித் திரிகிறார்கள். 

மோசடி செய்த தனியார் கல்லூரிகளை விசாரித்தீர்களா? திமுக MP MLA அமைச்சர் நடத்தும் கல்லூரிகள் செய்த மோசடியை எப்பொழுது விசாரிக்க போகிறீர்கள்? பதில் சொல்லுங்க இரும்புக்கரம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA MP Minister CM mkstalin Anna University Arappor iaykkam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->