திமுக எம்எல்ஏ-வை கதறவிட்ட நெறியாளர்! வைரலாகும் வீடியோ!
DMK MLA Paranthaman ADMK Raj Sathyan
பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில், திமுக எம்எல்ஏ பரந்தாமன் - நெறியாளர் உடன் விவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக செய்தி ஊடகங்களை மிரட்டும் தோணியில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் பேசியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"இத்தனை ஆண்டுகளாக ஊடக விவாதங்கள், அஇஅதிமுக சார்பில் ஒருவர் Vs திமுகவைச் சேர்ந்த மூவர், இது போதாதென்றால் சில நெறியாளர்களே திமுக ஆதரவாக பேசும் நிலை இருந்தபோது இனித்தது, இப்போது கசக்கிறதா?
ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை, நியூட்ரினோ, சிஏஏ என தொடர்ச்சியாக இதே ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு, உண்மைக்கு புறம்பான Narrative-களை கட்டமைத்த போது இனித்தது,
இப்போது ஊடகங்கள் மக்களின் நிலை உணர்ந்து ,போராடும் தொழிலாளிகளின் வலியை உணர்ந்து நியாயமாக ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் போது கசக்கிறதா?
Brace Yourselves திமுக.. இது வெறும் ஆரம்பம் தான். தொடர்ந்து இந்த விடியா திமுக அரசின் ஒவ்வொரு அவலமும் அம்பலமாகும்! விடியா திமுகவின் அதிகார மிரட்டலை திறம்பட கையாண்டு, பதில் கேள்விகளை சரியாக எழுப்பிய நெறியாளர் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MLA Paranthaman ADMK Raj Sathyan