செந்தில் பாலாஜியை கைது பண்ணிட்டா தாமரை மலர்ந்திடுமா.? கோவையில் முழங்கிய ஆ.ராசா.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்து கோவையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதாவது "வரும் 20ம் தேதி கலைஞர் கோட்ட திறப்பு விழா அழைப்பிதழை தருவதற்காக பாட்னா சென்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தேன். அப்போது இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என என்னிடம் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதற்கு செந்தில் பாலாஜி ஒரு காரணம் என மிகச் சிறப்பாக செயல்பட்ட ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை கைது செய்து நெருக்கடி கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சொன்னேன், இங்கேயும் சொல்கிறேன். சிறு சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிதம்பரம் தொடங்கி அனைத்து தலைவர்களையும் இது போன்ற கொடுமைக்கு ஆளாக்குகின்றனர்.

ஆனால் பிரதமர் மோடியின் நண்பர் அதானி, முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் அறிக்கை சொல்கிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் மவுனம் சாதித்தால் நீங்களும் பிராடுதான் என மோடியை பார்த்து சொன்னேன். அதை  இப்போதும் உங்கள் முன்னால் சொல்கிறேன்.

இந்தியாவில் காட்டாட்சியை, ஊழலாட்சியை, மதவெறி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற நீங்கள் (பாஜக) கொங்கு மண்டலத்திலேயே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அமைச்சர் ஒருவரை முடக்கிவிட்டால் இங்கே தாமரை மலரும் என நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு இதே கோவையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்துக்கு தமிழக முதவ்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார். 

அதில் இந்தியாவின் பிரதமரும் இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்று கலைஞர் வாழ்க என முழக்கமிடுவார்கள். ஆனால் இந்தியாவில் மோடி, அமித்ஷாக்கள் இருக்க மாட்டார்கள். அந்த இலக்கை நோக்கி பயணிப்போம்" என பொதுக்கூட்டம் மேடையில் ஆ.ராசா முழங்கியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK mp a raja criticized BJP and narendra modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->